/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய சட்ட சேவை தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய சட்ட சேவை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 09, 2024 01:25 AM
நாமக்கல், நவ. 9-
தமிழ்நாடு மாநில சட்டப்
பணிகள் ஆணைக்குழு சார்பில், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியை, மாவட்ட சட்டப்
பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குருமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, திருச்செங்கோடு சாலை, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தை அடைந்தது. அதில், சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், விரைவு மகிளா நீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபாசந்திரன், குடும்பநல நீதிபதி பாலகுமார், தலைமை குற்றவியல் நடுவர் விஜயகுமார், தலைமை சார்பு நீதிபதி விஜய்கார்த்திக், கூடுதல் சார்பு நீதிபதி கண்ணன், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி தங்கமணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரவீனா, கூடுதல் மகிளா நீதிபதி சுகன்யா, சட்டக்கல்லுாரி சிறப்பு விரிவுரையாளர் சாஜ் உள்பட வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.