/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் நேஷனல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்
/
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் நேஷனல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் நேஷனல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் நேஷனல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்
ADDED : மே 16, 2024 03:53 AM
நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.,), பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வாரிய தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில், இப்பள்ளி மாணவி சாருநேத்ரா, 500க்கு, 478 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம், மாணவர் சுபிக்சன், 474 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம், மாணவி சாதனா, 500க்கு, 460 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
தமிழில், இரண்டு மாணவியர், 100, கணிதத்தில், 100, அறிவியலில், 97, சமூக அறிவியலில், 96, ஆங்கிலத்தில், 93 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளி மாணவர் பிரணீத், 500க்கு, 470 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவன் ரக்சித், 468, மாணவி மிருதுனா, 464 மதிப்பெண் பெற்று, இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
ஓவியத்தில், 3 பேர், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில், 88, தமிழில், 99, வேதியியல், உயிரியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில், 97, வணிக ஆய்வியல், 96, கணக்கு, கணக்கியல், இயற்பியல் மற்றும் கணினிஅறிவியல் பாடங்களில், 95 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர்
சரவணன், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.