ADDED : மார் 28, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், தேசிய மாணவர் படை தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். சேலம், 12வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த ஹவில்தார் கோவிந்தராஜ், முப்படை
பிரிவுகளில் என்.சி.சி., மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி என்ற தலைப்பில் பேசினார். மேலும், என்.சி.சி., தேர்வுகளில் சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற, 19 மாணவ, மாணவியர்களுக்கு, 'பி' சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் சவுந்திரராஜன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், 140 பேர் கலந்து கொண்டனர்.