/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுப்பதிவு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு

ADDED : ஏப் 25, 2024 04:46 AM
நாமக்கல்: 'வெளிமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று ஓட்டுப்போடும் வகையில், சம்பந்தப்பட்ட ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் லோக்சபா தேர்தல், நாளை (ஏப்., 26), மே, 7, 13 ஆகிய நாட்களில் நடக்கிறது. அங்கு நடக்கும் தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, வெளிமாநில தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று ஓட்டளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஓட்டுப்பதிவு நாட்களில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.