/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
/
ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
ADDED : மார் 24, 2024 01:44 AM
ப.வேலுார், ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு, பாதுகாப்பு பலப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ப.வேலுார் தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு வழங்குவதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ப.வேலுார் தாலுகா அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு வந்து அறையில் வைத்து, 'சீல்' வைத்தனர். அந்த அறையை கலெக்டர் உமா, நேற்று பார்வையிட்டார்.
அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன் வைக்கப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா வேலை செய்யாததால், உடனடியாக மாற்று, 'சிசிடிவி' கேமரா வைக்கவும், இந்த அறைக்கு முன் பாதுகாப்புக்கு போலீசார் பணியில் அமர்த்தவும் உத்தரவிட்டார். ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.