/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெளிநாட்டு வேலை மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவு
/
வெளிநாட்டு வேலை மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவு
வெளிநாட்டு வேலை மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவு
வெளிநாட்டு வேலை மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 07:31 AM
ஆத்துார்: வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் இருவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அருண், 24. எம்.எஸ்சி., ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரி. வெளிநாட்டில் சமையல் வேலைக்கு முயன்றார். இவரிடம், திருச்சியை சேர்ந்த சையது, 54, கேரளா, திருவனந்தபுரம் அப்துல்காதர், 59, ஆகியோர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக, 1.70 லட்சம் ரூபாயை பெற்றனர்.
இரு மாதங்களுக்கு முன் தாய்லாந்து சென்ற அருண், வேலை கிடைக்காமல் சொந்த ஊர் வந்தார். தொடர்ந்து அவர் புகார்படி தம்மம்பட்டி போலீசார், சையது, அப்துல்காதர் மீது வழக்கு பதிந்து, கடந்த, 5ல் கைது செய்தனர்.
இதுகுறித்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறியதாவது: செந்தாரப்பட்டியை சேர்ந்த அருண், சமையல் வேலைக்கு தாய்லாந்து சென்ற நிலையில், அங்குள்ள புரோக்கர்கள், அவரை ஆன்லைன் சூதாட்ட தொழிலுக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து தப்பிய அவர், துாதரகத்துக்கு தகவல் அளித்து சொந்த ஊர் வந்துள்ளார். இவர் புகாரில் இருவரை கைது செய்துள்ளோம்.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோசடி செய்து வந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, தமிழக டி.ஜி.பி., சங்கர்ஜிவால், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்டவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரைவில் விசாரிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.