/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொட்டி தீர்த்த கனமழையால் ஒரே இரவில் 400 மி.மீட்டர் பதிவு
/
கொட்டி தீர்த்த கனமழையால் ஒரே இரவில் 400 மி.மீட்டர் பதிவு
கொட்டி தீர்த்த கனமழையால் ஒரே இரவில் 400 மி.மீட்டர் பதிவு
கொட்டி தீர்த்த கனமழையால் ஒரே இரவில் 400 மி.மீட்டர் பதிவு
ADDED : ஜூன் 08, 2024 02:59 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரே இரவில், 400 மி.மீ., மழை பெய்துள்ளது.
கடந்த ஒருவாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மீண்டும், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் அதிகரித்துள்ளது. வெயில் காரணமாக, பகலில் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல் நள்ளிரவு வரை, மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், ஒரு சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் தடையும் ஏற்பட்டது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றன.
கனமழையால், மாவட்டம் முழுதும் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு, தண்ணீர் வரத்து துவங்கியது. அவற்றை பயன்படுத்தி விவசாயிகள் உழவுப்பணியை மேற்கொண்டுள்ளனர். நேற்று காலை, 6:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீ.,) பின் வருமாறு:
எருமப்பட்டி, 20, குமாரபாளையம், 24.40, மங்களபுரம், 4, மோகனுார், 11, நாமக்கல், 51.30, ப.வேலுார், 33, புதுச்சத்திரம், 25, ராசிபுரம், 27, சேந்தமங்கலம், 65, திருச்செங்கோடு, 46.20, கலெக்டர் அலுவலகம், 34, கொல்லிமலை, 59 என, 399.90 மி.மீ., மழை பெய்துள்ளது.