/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்ஸ்போர்டு, விவேகானந்தா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
/
ஆக்ஸ்போர்டு, விவேகானந்தா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
ஆக்ஸ்போர்டு, விவேகானந்தா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
ஆக்ஸ்போர்டு, விவேகானந்தா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
ADDED : மே 16, 2024 04:30 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி ஆக்ஸ்போர்டு மற்றும் விவேகானந்தா பள்ளியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில், பள்ளி அளவில் மாணவி கவிஷ்கா, 494 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதேபோல், மாணவி தனிஷ்கா, 481 மதிப்பெண் பெற்று, 2ம் இடம், மாணவி வினிசா, 479 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். ஸ்ரீவிவேகானந்தா பள்ளியின், பத்தம் வகுப்பு மாணவியர் சாய்ஸ்ரீ, 476 மதிப்பெண் பெற்று முதலிடம், ரித்திகா, 462 மதிப்பெண் பெற்று, 2ம் இடம், மாணவர் அவினாஷ், 459 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர்.
மேலும், பள்ளியில், 490க்கு மேல், ஒருவர், 480 மேல், 2 பேர், 470க்கும் மேல், 5 பேர், 460க்கு மேல், 8 பேர், 450க்கு மேல், 14 பேர், 400க்கு மேல், 27 பேர் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கு, பள்ளி தாளாளர் ராஜி, செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.