/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் காவிரி ஆற்றில் படகு போட்டி ரத்து
/
ப.வேலுார் காவிரி ஆற்றில் படகு போட்டி ரத்து
ADDED : ஆக 02, 2024 01:01 AM
ப.வேலுார்:'நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் காவிரி ஆற்றில் ஆடி 18 அன்று நடக்க இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுகிறது' என, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து, 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வரும் 4 ம் தேதி ஆடிப் பண்டிகையின் போது நடக்க இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் ஆடி 18 அன்று, ப.வேலுார் மற்றும் பொத்தனூர் காவிரி ஆற்றில் குளிக்கவும், முளைப்பாரி விடவும் அனுமதி இல்லை.
மேலும் பொதுமக்கள் காவேரி ஆறு, கால்வாய்கள், மற்றும் நீர் நிலைகளில் குளிக்கவும், நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல், ஈம காரியங்கள் செய்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.