/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு டாக்டர்கள் ஒரு மணி நேரம் 'ஸ்டிரைக்' சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிப்பு
/
அரசு டாக்டர்கள் ஒரு மணி நேரம் 'ஸ்டிரைக்' சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிப்பு
அரசு டாக்டர்கள் ஒரு மணி நேரம் 'ஸ்டிரைக்' சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிப்பு
அரசு டாக்டர்கள் ஒரு மணி நேரம் 'ஸ்டிரைக்' சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிப்பு
ADDED : ஆக 18, 2024 03:59 AM
நாமக்கல்: மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள மருத்துவ கல்-லுாரியில் உள்ள கூட்டரங்கில், கடந்த, 9ல் உயிரிழந்த நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் உடல் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோத-னையில் அவர் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்ததாக தெரிய-வந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, நாடு முழுதும் உள்ள அரசு டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கொலையில் சம்பந்தப்பட்ட நபர்-களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும், டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கி-யுள்ளனர். தமிழக அரசு மருத்துவர்கள் சங்கமும் இந்த போராட்-டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பல்வேறு மாவட்-டங்களில் அரசு டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், மெழுகு-வர்த்தி ஏந்தியும், மொபைல் போன் லைட் அடித்தும், மவுன ஊர்-வலம் நடத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவம-னைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவு, நேற்று காலை, 7:30 முதல், 8:30 மணி வரை செயல்பட-வில்லை. அதனால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்-ளாகினர்.* இதேபோல் ராசிபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உயிரி-ழந்த மாணவிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி-யிலும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்தனர்.