/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி
/
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி
ADDED : மே 25, 2024 02:52 AM
மோகனுார்: 'மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றதால், துர்நாற்றம் வீசியது. அதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து அரங்கேறி வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
மோகனுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. அதில், சுப்ரமணியபுரம், ஈ.பி, காலனி, ஆசிரியர் காலனி, நாமக்கல் சாலை, காட்டு பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அங்கு அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் வழியாக, ப.வேலுார் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாக்கடை கால்வாய் வழியாக, வள்ளியம்மன் கோவில் பின்புறம் உள்ள வாய்க்காலில் கலக்கும்.
மழைக்காலங்களில் சாக்கடை நிரம்பி, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரயில்வே மேம்பாலம் அடியில், மூன்று அடி உயரம் தேங்கி நிற்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படும். மேலும், பல வண்டிகள் நீரில் இன்ஜின் மூழ்கி நின்று விடும். அதனால், போக்குவரத்து பாதிக்கப்படும். தற்போது, மாவட்டம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. மோகனுார் பகுதியிலும், மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 3:30 மணிக்கு கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், மோகனுார் - ப.வேலுார் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் அடியில், மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. அதனால், துர்நாற்றம் வீசியதுடன், வாகன ஓட்டிகளும், ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

