/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் கோழி கழிவை கொட்டி தீ வைப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல்
/
சாலையோரம் கோழி கழிவை கொட்டி தீ வைப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல்
சாலையோரம் கோழி கழிவை கொட்டி தீ வைப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல்
சாலையோரம் கோழி கழிவை கொட்டி தீ வைப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல்
ADDED : ஜூன் 29, 2024 02:22 AM
மோகனுார்: மோகனுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அவற்றில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்போரிடம், தினமும் காலை நேரத்தில், துப்புரவு பணியாளர்கள், துாய்மை காவலர்கள், வீடு வீடாக சென்று, மட்கும் குப்பை, மட்காத குப்பையை சேகரிக்கின்றனர்.
அவ்வாறு சேகரித்த குப்பையை, பேட்டப்பாளையம் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் கொட்டி, குவித்து வருகின்றனர். இந்நிலையில், மோகனுார் - வாங்கல் செல்லும் சாலையில், உயர்மட்ட தரைவழி பாலம் அருகே, செங்கத்துறை பகுதியில், சாலையோரம் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். மேலும், கோழிக்கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து குவிக்கின்றனர். அவ்வாறு குவிக்கப்படும் குப்பைக்கு தீ வைப்பதால், புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால், மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பையை அகற்றுவதுடன், கோழி கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.