/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மக்கள்:மன்னிக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
/
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மக்கள்:மன்னிக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மக்கள்:மன்னிக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மக்கள்:மன்னிக்க மாட்டார்கள்: எம்.பி., ராஜேஸ்குமார்
ADDED : ஏப் 14, 2024 02:02 AM
நாமகிரிப்பேட்டை;''துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் பகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமை வகித்தார். எழுத்தாளர் மற்றும் பேச்சாளருமான மதிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், துாத்துக்குடியில், 2018 மே, 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பெண்கள் உட்பட அப்பாவிகள், 13 பேரை சுட்டு கொன்றதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஆட்சி நடத்திவிட்டு, மக்கள் நலனோடு ஆட்சி நடத்தும் நம், தி.மு.க., ஆட்சியை குறை சொல்ல யாருக்கு என்ன தகுதி இருக்கிறது.
கடந்த மூன்றாண்டு, தி.மு.க., ஆட்சியில், மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி என பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் திட்டங்கள், இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக உள்ளது. பல மாநில முதல்வர்களும் கண்டு வியக்கும் அரசு பள்ளி குழந்தைகளின் பசியை போக்கும் காலை உணவு திட்டம், ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த உதயசூரியனுக்கு ஓட்டளிப்பீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ்குமார், கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

