/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் தற்காலிக பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
/
மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் தற்காலிக பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் தற்காலிக பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் தற்காலிக பணி தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 09, 2024 01:25 AM
நாமக்கல், நவ. 9-
'தற்காலிக மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் பணியிடத்துக்கு, தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நலச்சங்கம் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், பணிபுரிய மாவட்ட மருந்தாளுனர், 1, ஆய்வக நுட்புனர், 1, பணியாளர், 11 மாத ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக நியமிக்க மாநில நலச்சங்கம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மருந்தாளுனர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி, பட்டப்படிப்பு, டிப்ளமோ சான்றிதழ் மற்றும் இதனுடன் கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். மாவட்ட மருந்தாளுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம், 15,000 ரூபாய். ஆய்வக நுட்புனர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி பிளஸ் 2, சான்றிதழுடன் டி.எம்.எல்.டி., சி.எம்.எல்.டி., பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த பணியிடத்திற்கான தொகுப்பூதியம், 13,000 ரூபாய்.
மேற்கண்ட பணியிடத்திற்கு வயது வரம்பு, 65-க்குள் இருக்கவேண்டும். தகுதி உள்ள நபர்கள், தங்களுடைய விண்ணப்பங்களை தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ் நகலுடன், தங்கள் புகைப்படத்தையும் இணைத்து, 'துணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், நாமக்கல், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பழைய வளாகம், மோகனுார் சாலை, நாமக்கல்-637001' என்ற முகவரிக்கு, பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பங்கள் வரும், 18, மாலை, 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, அலுவலக தகவல் பலகையில் அறிந்து கொள்ளலாம். அல்லது, 04286-292025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.