/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடிகாசு வழங்கும் விழா
/
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடிகாசு வழங்கும் விழா
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடிகாசு வழங்கும் விழா
சண்டி கருப்பசாமி கோவிலில் நாளை பிடிகாசு வழங்கும் விழா
ADDED : ஆக 03, 2024 01:34 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த கொங்களம்மன் கோவில் அருகே பிரசித்தி பெற்ற, 30 அடி உயர சண்டி கருப்பசாமி, நாககன்னி கோவில்கள் உள்ளன. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி தினத்தில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். முக்கியமாக, ஆடி அமாவாசையில் பிடி காசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஆடி அமாவாசையை ஒட்டி நடக்கும் சிறப்பு யாகத்தில், பக்தர்கள் காணிக்கையாக தரும் காசை வைத்து பூஜை செய்வர். பூஜை செய்தபின் பிடிகாசு கேட்டு வரும் பக்தர்களுக்கு பூசாரி யாக குண்டத்தில் இருந்து காசுகளை எடுத்து கொடுப்பார். அந்த காசை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இது வீட்டில் இருந்தால் திருமணம், குழந்தை பாக்கியம், வழக்குகளில் வெற்றி, உடல் ஆரோக்கியம், வியாபாரம் உள்ளிட்டவைகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. அடுத்த ஆண்டு, தங்களது பிரார்த்தனை நிறைவறினால், வைத்திருக்கும் பிடி காசுபோல் இரண்டு மடங்கு காணிக்கையாக யாகத்திற்கு தர வேண்டும். இந்தாண்டுக்கான பிடி காசு வழங்கும் நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. இன்று காலை, 10:00 மணிக்கு மோகனுார் காவிரியில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு, 12:00 மணிக்கு மகா யாக பூஜையும் தொடங்குகிறது.