/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நாமக்கல் முதியவர் பலி பேரனிடம் போலீசார் விசாரணை

ADDED : மே 03, 2024 02:37 AM
நாமக்கல்:நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியானார். இதையடுத்து அவரது பேரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல், எருமப்பட்டி தேவராயபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 67. இவரது பேரன் பகவதி 20, ஏப்., 30ம் தேதி கொசவம்பட்டி வீட்டில் இருந்த தாய் நதியா 40,வுக்கும் சண்முகத்திற்கும் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்தார். இருவருக்கும் வயிற்று வலி, வாந்தி வரத்தொடங்கியது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சண்முகம் இறந்தார்.
நதியா, சண்முகம் சாப்பிட்டு வைத்த மீதி உணவு சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம் பகவதி, ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகவதி வாங்கி சென்ற உணவில், எவ்வாறு விஷம் கலந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். பகவதி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி வருகிறார். சண்முகத்தின் பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.