/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொங்களம்மன் கோவிலில் பூஜை: பக்தர்கள் வழிபாடு
/
கொங்களம்மன் கோவிலில் பூஜை: பக்தர்கள் வழிபாடு
ADDED : ஆக 04, 2024 01:42 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல் கொங்களம்மன் கோவில் அமைந்துள்ளது. கொல்லிமலையில் இருந்து வரும் ஓடையின்கரையில் இக்கோவில் உள்ளதால், ஆடிப்பெருக்கில் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வந்துசெல்வர். மேலும், ஆடிப்பெருக்கு நாளில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சிறு தெய்வங்களின் ஆயுதங்களை ஓடையில் சுத்தம் செய்து, மாலை அணிவித்து கொங்களம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து செல்வது வழக்கம்.
அதன்படி, நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, காக்காவேரி, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, பேளுக்குறிச்சி, ஒடுவன் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான சுவாமிகளின் ஆயுதங்களை எடுத்து வந்து, நேற்று சுத்தம் செய்து வழிபட்டனர். தற்போது ஓடையில் தண்ணீர் இல்லை என்றாலும், அருகில் உள்ள கிணறு, போர்வெல்களை பயன்படுத்தி கொள்கின்றனர். காலை கொங்களம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.