sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

3 சதவீதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர் வலியுறுத்தல்

/

3 சதவீதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர் வலியுறுத்தல்

3 சதவீதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர் வலியுறுத்தல்

3 சதவீதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 04, 2024 10:54 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 10:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், விசைத்தறி தொழிலில், 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்தாண்டு ஒப்பந்தத்தில், 2023 ஜூன், 1 முதல் 2024 மே, 31 வரை, 7 சதவீதமும், 2024 ஜூன், 1முதல், 2025 மே, 31 வரை, 3 சதவீதமும் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தற்போது, 3 சதவீதம் கூலி உயர்வை விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறுகையில், ''ஒப்பந்தப்படி தற்போது, 3 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்.

இந்த கூலி உயர்வை வழங்க கோரி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், சங்கம் சார்பில் காவிரி, ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us