/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரிக்கு 'சிறந்த ஐடியா-2024' விருது வழங்கல்

ADDED : ஆக 06, 2024 02:31 AM
ராசிபுரம், -ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு, சிறந்த சமூக தாக்கத்திற்கான, 'ஐடியா விருது-2024' கிடைத்துள்ளது.
ஆட்டோடெஸ்க் மென்பொருள் நிறுவனமும், ஐ.சி.டி., அகாடமியும் இணைந்து, 'இந்தியா வடிவமைப்பு வாரம்-2024' என்ற போட்டியை நடத்தின. இதில், '24 மணிநேர வடிவமைப்பு சவால்' என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டன. நீர் நிலைகளிலிருந்து குப்பை மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றி சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கருத்துக்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பொருட்டு இவ்வடிவமைப்பு போட்டி நடந்தது.
இப்போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி இறுதியாண்டு மெக்கானிக்கல் துறை மாணவர்கள் ஹரிஷ் ஜெயின்த், இளங்கோ ஆகியோர், சிறந்த சமூக தாக்கத்தை உருவாக்கும் ஐடியாக்கான விருதை பெற்றனர்.
அவர்களை, ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் கந்தசாமி, செயலாளர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி, குணசேகரன், இணை செயலாளர் ராகுல் ஆகியோர் விருது பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த முதல்வர் மாதேஸ்வரன், துறைத்தலைவர்கள், ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்தினர்.