/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு
/
வெண்ணந்துார் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : ஜூலை 03, 2024 07:46 AM
வெண்ணந்துார் : சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ் ஒன்று, நேற்று மாலை, 5:30 மணிக்கு நாமக்கல் நோக்கி புறப்பட்டது. அதில் ஏறிய பயணிகள், வெண்ணந்துார் அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்க டிக்கெட் கேட்டனர். ஆனால், கண்-டக்டர், 'ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் பஸ் நிற்காது'என, தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், இதுகு-றித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை வழியாக பஸ் சென்றபோது, அங்கு காத்திருந்தவர்கள் பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வெண்ணந்துார் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.