/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து மறியல்
/
மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து மறியல்
மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து மறியல்
மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து மறியல்
ADDED : ஆக 02, 2024 01:44 AM
நாமக்கல், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு, மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து நாமக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல், ரங்கர் சன்னதி வீதியில் இயங்கும் இந்தியன் வங்கி அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி தலைமை வகித்தார். அதில், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்தும். சிறு,குறு தொழில்கள், -விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுவதை கண்டித்தும், விவசாயம், உணவு, உரமானியங்கள், 100 நாள் வேலை ஆகியவற்றின் நிதி குறைக்கப்பட்டதை கண்டித்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாராளமாக வரி சலுகை செய்யும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியில்லாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட, 27 பேரை போலீசார் கைது செய்தனர்.