/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்லில், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு இலவச நிலம், வீடு வழங்க கோரி, ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தலைவர் ராமன், நாமக்கல் மாவட்ட தலைவர் செல்-வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், திருச்செங்-கோடு செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு குடியிருக்க, தமிழகர-சிடம் நிலம் வழங்க கேட்டும், மத்திய அரசிடம் இலவச வீடு கட்டித்தர கோரியும், கோஷம் எழுப்பினர்.