/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு
/
அரசு மகளிர் கல்லுாரியில் நாளை பொது கலந்தாய்வு
ADDED : ஜூலை 07, 2024 07:14 AM
நாமக்கல் : 'காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நாளை பொது கலந்-தாய்வு நடக்கிறது' என, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுா-ரியில், நடப்பு, 2024-25ம் கல்வி ஆண்டில், இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. இன்னும் காலியாக இருக்கக்கூடிய இடங்களுக்கு, நாளை காலை, 9:00 மணிக்கு, பொது கலந்தாய்வு நடக்கிறது.இந்த பொது கலந்தாய்வில், மாணவியர் விண்ணப்பித்திருந்த பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்கவில்லை என்றால், வேறு பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களில் சேர்க்கை வழங்கப்-படும். அரசு விதிமுறைகள்படி, இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கக்கூடிய இடங்களுக்கு, மாணவியர் வருகை தரவில்லை என்றால், வேறு இனத்தை சேர்ந்த மாணவியர் அரசாணைப்படி அந்த காலி இடத்திலே நிரப்பப்படுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.