/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாக்கடையை துார்வார பொது மக்கள் கோரிக்கை
/
சாக்கடையை துார்வார பொது மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 03:57 AM
நாமக்கல்: நாமக்கல், அன்பு நகர் பிரிவில் உள்ள சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் - சேலம் சாலையில் பொன் நகர், முதலியார் வீதி உள்ளிட்ட பகுதிகள்
உள்ளன. அதில் அன்புநகர்-2க்கு செல்லும் பிரிவு சாலையின் முகப்பில், 'மெகா சைஸ்'
சாக்கடை கால்வாய் உள்ளது.
அதில், பல்வேறு பகுதிகளில் இருந்து
கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சீரான முறையில் கழிநீர் செல்லாமல், சாக்கடை அடைத்து தேங்கி உள்ளது.
இதனால் வீசும் துர்நாற்றத்தால், அப்பகுதி கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், கொசு உற்பத்தியாகி சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாக்கடை அடைப்பை துார்வார
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.