/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் தொகுதி தேர்தல் பார்வையாளர் தொடர்பு மொபைல் எண்கள் வெளியீடு
/
நாமக்கல் தொகுதி தேர்தல் பார்வையாளர் தொடர்பு மொபைல் எண்கள் வெளியீடு
நாமக்கல் தொகுதி தேர்தல் பார்வையாளர் தொடர்பு மொபைல் எண்கள் வெளியீடு
நாமக்கல் தொகுதி தேர்தல் பார்வையாளர் தொடர்பு மொபைல் எண்கள் வெளியீடு
ADDED : மார் 28, 2024 02:34 AM
நாமக்கல், நாமக்கல் லோக்சபா தொகுதி, தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் செலவு கணக்கு பார்வையாளர் ஆகியோரை தொடர்புகொள்ளும் வகையில், மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் லோக்சபா தேர்தலுக்காக, அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய தேர்தல் பார்வையாளர்களை, இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் லோக்சபா தொகுதி தேர்தலுக்காக, மத்திய தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளராக ஹர்குன்ஜித்கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்க, நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் செலவின பார்வையாளராக, வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
நாமக்கல் லோக்சபா தொகுதி பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுரை, 9489948813 என்ற மொபைல் எண்ணிலும், செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜியை, 9489948812 என்ற மொபைல் எண்ணிலும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.