/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடி பவுர்ணமியையொட்டி அங்காளம்மனுக்கு பூஜை
/
ஆடி பவுர்ணமியையொட்டி அங்காளம்மனுக்கு பூஜை
ADDED : ஜூலை 21, 2024 02:47 AM
எருமப்பட்டி;ஆடி மாத பவுர்ணமியையொட்டி, பழையபாளையம் அங்காளம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
எருமப்பட்டி அருகே, பழையபாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி, அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்காளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், முத்துக்காப்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி, அம்மனுக்கு, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு மூலவர் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.