/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
ADDED : செப் 08, 2024 07:45 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை -- திருச்செங்கோடு வழித்-தடத்தில் ஆனங்கூர் உள்ளது. இப் பகுதியில் ரயில்பாதை செல்கி-றது. இந்த ரயில் பாதையை கடந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். வெப்படை, திருச்செங்கோடு சாலை வழியாக, தினமும் பஸ், லாரி, கார், கல்லுாரி வாகனங்கள், தொடர்ச்சியாக இடைவெளியின்றி சென்று வருகின்றன.ஆனங்கூர் ரயில் பாதையில், 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதால், மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், 'இந்த ரயில்வே கேட் அவசர பராமரிப்பு பணிகளுக்காக வரும், 10, 11, 12
ஆகிய தேதியில் மூடப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்றுப்பாதையில் செல்லு-மாறு
கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ரயில்வே நிர்வாகம்' என எழுதி வைக்கப்பட்டுள்ளது.