/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரெட்டிப்பட்டி - எருமப்பட்டி வரை ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம்
/
ரெட்டிப்பட்டி - எருமப்பட்டி வரை ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம்
ரெட்டிப்பட்டி - எருமப்பட்டி வரை ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம்
ரெட்டிப்பட்டி - எருமப்பட்டி வரை ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம்
ADDED : ஆக 05, 2024 02:07 AM
எருமப்பட்டி,
ரெட்டிப்பட்டியில் இருந்து, எருமப்பட்டி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், துாசூர் அருகே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை நடந்தது.
நாமக்கல் - துறையூர் சாலையில், ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சாலையை விரிவாக்கம் செய்யும் வகையில், 9.2 கிலோ மீட்டர் துாரத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை மூலம் கடின பருவங்களுடன் கூடிய இருவழிச்சாலையாக மாற்ற அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், தமிழக அரசு தற்போது சாலை விரிவாக்கம் செய்வதற்காக, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால், சாலை விரிவாக்கத்தில், துாசூர் ஏரியின் அருகே கருவாட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதனால், பாலம் கட்டப்படும் இடத்தில், ஆற்றின் குறுக்கே மண் பரிசோதனை மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்யும் பணி, நேற்று நடந்தது. இதில், நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, மண் ஆய்வு செய்யும் பணியை பார்வையிட்டு உறுதிப்படுத்தினார். உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டேர்
உடனிருந்தனர்.