/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
/
லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
ADDED : ஜூலை 28, 2024 04:02 AM
புதுச்சத்திரம்: கர்நாடகா மாநிலம், சிரூர் பகுதியில் கடந்த, 16ல் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரியுடன் அதன் டிரைவர் அடித்துச் செல்லப்பட்டார். இவர், புதுச்சத்திரம் யூனியன், தாத்தையங்கார்-பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சின்னண்ணன் என்பது தெரிய-வந்தது. இதையடுத்து, உயிரிழந்த டிரைவர் சின்னண்ணன் குடும்-பத்தினருக்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், 'அட்மா' குழு தலைவர் கவுதம் ஆகியோர், முதல்-வரின் நிவாரண நிதி, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
இதேபோல், செல்லப்பம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சர-வணன், காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரது உடல், நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அதனால், சரவணனின் குடும்பத்தின-ருக்கும், முதல்வரின் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.