/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிடா விருந்து வைக்க அரசு பள்ளியில் அமைத்த பந்தல் அகற்றம்
/
கிடா விருந்து வைக்க அரசு பள்ளியில் அமைத்த பந்தல் அகற்றம்
கிடா விருந்து வைக்க அரசு பள்ளியில் அமைத்த பந்தல் அகற்றம்
கிடா விருந்து வைக்க அரசு பள்ளியில் அமைத்த பந்தல் அகற்றம்
ADDED : ஆக 09, 2024 03:41 AM
ப.வேலுார்: கோவில் திருவிழாவையொட்டி கிடா விருந்து வைப்பதற்காக அரசு பள்ளியில் அனுமதி இன்றி பந்தல் போடப்பட்டது குறித்த செய்தி நேற்று படத்துடன் நமது நாளிதழில் வெளியானது. அதை-யடுத்து பந்தல் அகற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கே. கொளந்த பாளையம் கிராமத்தில் புடவைக்காரி அம்மன் கோவில் அமைந்-துள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தது.
அதை ஒட்டி கோவில் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தென்னங்கீற்று-களால் பந்தல் அமைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்திருந்-தனர். விளையாட்டு மைதானத்தில் நேற்று சைவ விருந்து, இன்று கிடா விருந்து நடக்க இருந்தது.
அரசு பள்ளி வளாகத்தில் விருந்து வைக்க பந்தல் அமைக்கப்-பட்டதற்கு, அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி நேற்று நமது நாளிதழில் செய்தி படத்துடன் வெளியானது.
நாமக்கல் மாவட்ட டி.இ.ஓ., பாலசுப்பிரமணி, இது குறித்து,பள்ளி தலைமை ஆசிரியர் வளர்செல்வி மற்றும் பரமத்தி வட்டார ஏ.இ.ஓ., கவுரியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அரசு பள்ளியில் அனுமதியின்றி பந்தல் அமைத்ததை அப்புறப்ப-டுத்த உத்தரவிட்டார். பரமத்தி வட்டார ஏ.இ.ஓ., கவுரி சம்பந்-தப்பட்ட கோவில் நிர்வாகத்தினரிடம் பேசி பந்தலை நேற்று முழுவதுமாக அகற்றினார்.