/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் ஒயரில் உரசிய மரக்கிளைகள் அகற்றம்
/
மின் ஒயரில் உரசிய மரக்கிளைகள் அகற்றம்
ADDED : மே 17, 2024 02:26 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் மின் ஒயரில் உரசியபடி இருந்த மரக்கிளைகளை மின்வாரிய பணியாளர்கள் அகற்றினர்.
பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த, 13ம் தேதி சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சூறாவளி காற்றில் சந்தைபேட்டை, கோட்டக்காடு, சின்னார்பாளையம் உள்ளிட்ட பல பகுதியில் மரங்கள் சாய்ந்து, மின் ஒயர்கள் சேதமடைந்தது. பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 4 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை எற்பட்டது. பல்வேறு இடங்களில் மின் ஒயரில் உரசியபடி மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் ஒயரில் உரசியபடி உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில், மின்வாரிய பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். ஆர்.எஸ்., சாலையில், ஆபத்தான முறையில் மின் ஒயரில் உரசிய மரக்கிளை அகற்றப்பட்டது. இது போல பல பகுதியிலும் அகற்றப்பட்டது.

