/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நரசிம்மர் கோவில் சாலையில் 'நார் மேட்' அமைக்க வேண்டுகோள்
/
நரசிம்மர் கோவில் சாலையில் 'நார் மேட்' அமைக்க வேண்டுகோள்
நரசிம்மர் கோவில் சாலையில் 'நார் மேட்' அமைக்க வேண்டுகோள்
நரசிம்மர் கோவில் சாலையில் 'நார் மேட்' அமைக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 13, 2024 10:59 AM
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோவிலில் இருந்து, ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலையில் புதிய, 'நார் மேட்' அமைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அதன் எதிரே நரசிம்மர், நாமகிரி கோவிலும், மலைக்கோட்டையின் கிழக்கே அரங்கநாதர் கோவிலும் உள்ளன. அதில் நரசிம்மர் மற்றும் அரங்கநாதரை பக்தர்கள் தரிசித்துவிட்டு எதிரே இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நடந்து சென்று, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நரசிம்மர் கோவிலில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் தேங்கா நாரில் தயாரிக்கப்பட்ட மிதியடி அமைக்கப்பட்டது. அது, தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனால் பக்தர்கள் வெயிலில் நடந்து செல்ல கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பழைய மிதியடியை மாற்றிவிட்டு புதிய மிதியடி அமைத்து, பக்தர்களின் பாதங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

