/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் விழுந்த பசு இறந்த நிலையில் மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசு இறந்த நிலையில் மீட்பு
ADDED : ஆக 17, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:வெண்ணந்துார், குட்டலாடம்பட்டியை சேர்ந்தவர் அப்பாசாமி, 60. இவர், நேற்று காலை தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, தோட்டத்தில் உள்ள, 80 அடி ஆழ கிணற்றில், பசு மாடு தவறி விழுந்தது. இதையடுத்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு, அப்பாசாமி தகவல் அளித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த பசுமாட்டை, இறந்த நிலையில் வெளியே கொண்டு வந்தனர். இறந்த பசுமாடு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கன்றுக்குட்டி ஈன்றது குறிப்பிடத்தக்கது.

