/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செயலாராய்ச்சி முடிவுகள் பரவலாக்கல் பணிமனை
/
செயலாராய்ச்சி முடிவுகள் பரவலாக்கல் பணிமனை
ADDED : ஆக 17, 2024 02:17 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 2023-24ம் கல்வியாண்டில் செய்து முடிக்கப்பட்ட செயலாராய்ச்சிகளின் முடிவுகளை பரவலாக்கும் பணிமனை, நேற்று நடந்தது.
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து, ஆராய்ச்சி தொகுப்பு நுாலை வெளியிட்டு பேசியதாவது:
இந்நிறுவனம் மூலம், 2023-24ம் கல்வியாண்டில், நிறுவன கல்வியாளர்களால், 9 செயலாராய்ச்சிகளும், பட்டதாரி ஆசிரியர்களால், 22 செயலாராய்ச்சிகளும் செய்து முடிக்கப்பட்டன.
செயலாராய்ச்சி என்பது, திருப்தியில்லாத கற்பித்தல், திருப்தியில்லாத பள்ளிச்சூழல், திருப்தியில்லாத கற்றல் போன்றவற்றை கண்டறிந்து, சூழல் மேம்பட சிந்தித்து, புதிய உத்திகளையும், செயல்பாடுகளையும் உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும்.
இந்நிறுவன கல்வியாளர்களாலும், பட்டதாரி ஆசிரியர்களாலும் செய்து முடிக்கப்பட்ட செயலாராய்ச்சிகள் வகுப்பறைகளிலும், கற்பித்தலிலும், கற்றலிலும் மேம்பாட்டை கொண்டு வந்தன. சூழலின் திருப்தியின்மையை கண்டறிந்து, சூழலில் மேம்பாட்டை கொண்டுவர புதிய உத்திகளை சிந்தித்து, அவற்றை நடைமுறைப்படுத்தி சூழலில் முன்னேற்றத்தை கொண்டு வருவதே செயலாராய்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தொகுப்பு நுாலை ஒருங்கிணைப்பாளர் அமீருன்னிசா பெற்றுக்கொண்டார். முதுநிலை விரிவுரையாளர்கள் வேலு, தேவராசு, பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.