/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு வேளாண் அதிகாரி தர்ணா
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு வேளாண் அதிகாரி தர்ணா
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு வேளாண் அதிகாரி தர்ணா
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு வேளாண் அதிகாரி தர்ணா
ADDED : ஜூன் 25, 2024 02:41 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம்புதுார், சாவடி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம், 75. இவர், வேளாண் துறை நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், 2009ல் பாதாள சாக்கடை திட்டத்துக்காக, 9,000 ரூபாய் செலுத்தி உள்ளார். மேலும், 15 ஆண்டுகளாக சொத்து வரியும் தவறாமல் செலுத்தி உள்ளார். ஆனால், இவர் வசிக்கும் சாவடி தெருவில், பாதாள சாக்கடை திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், பாதாள சாக்கடை அமைக்க எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், அவர் வசிக்கும் தெருவில், கால்வாய் வசதி இல்லாததால், தெருவில், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பாதாள சாக்கடை அமைக்காததால், அதிருப்தி அடைந்த மகாலிங்கம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.