/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1.60 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1.60 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 29, 2024 01:17 AM
நாமக்கல்,:நாமக்கல்
மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு
பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, ஆறு சட்டசபை
தொகுதிகளிலும், 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர்,
தொகுதி முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி
கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து
வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, நாமக்கல்
முதலைப்பட்டி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் திடீர் வாகன
சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை
செய்தனர். நெல்லை மாவட்டம், குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்த
சிவசங்கர் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி, 1.60 லட்சம் ரூபாய் கொண்டு
சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

