/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.48 கோடி சீட்டு பண மோசடி பாதிக்கப்பட்டோர் புகார் மனு
/
ரூ.2.48 கோடி சீட்டு பண மோசடி பாதிக்கப்பட்டோர் புகார் மனு
ரூ.2.48 கோடி சீட்டு பண மோசடி பாதிக்கப்பட்டோர் புகார் மனு
ரூ.2.48 கோடி சீட்டு பண மோசடி பாதிக்கப்பட்டோர் புகார் மனு
ADDED : ஜூலை 30, 2024 05:22 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் சீட்டுப்பணம் நடத்தி, 2.48 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 25க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளாதாவது: போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில், வடமலம்பட்டியை சேர்ந்த தனபால் என்-பவர், 'ஸ்ரீகுமரன் பைனான்ஸ்' என்ற பெயரில், 10 ஆண்டுகளாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அவர், 1, 2, 5 மற்றும், 10 லட்சம் ரூபாய் மாத சீட்டு நடத்தி வந்தார். அதில், போச்சம்-பள்ளியை சேர்ந்த, 260க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்-தனர். கடந்த, 2022 ஜூன் மாதத்திற்கு பிறகு, தனபால் சீட்டு பணத்தை ஒழுங்காக வழங்கவில்லை.
ஆனால், சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்களிடம், 'நான், பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்' என, தனபால் கூறி வந்தார். இதை ஏற்காமல் கடந்த, 2023 ல் பாதிக்கப்பட்ட, 60 பேர், போச்சம்பள்ளி போலீசில் புகாரளித்தனர். தற்போது அவர் மற்றும் மனைவி ஜோதிமணி, மகன் கார்த்திக் வங்கி கணக்கில் உள்ள பணத்தை போலீசார் முடக்கி உள்ளனர்.சீட்டு பணத்தை கேட்டால், தனபாலுடன் அவரது குடும்பத்தினர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவரிடம் மாத சீட்டு கட்டி ஏமாந்த, 55 பேரின் ஆவணங்கள் படி அவர்கள் ஏமாந்த, 2.48 கோடி ரூபாயை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.