/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பண இழப்பு ஏற்பட்டால் புகாரளிக்க எஸ்.பி., அறிவுரை
/
பண இழப்பு ஏற்பட்டால் புகாரளிக்க எஸ்.பி., அறிவுரை
ADDED : ஆக 02, 2024 09:23 PM
நாமக்கல்:'வங்கி கணக்கில் இருந்து பண இழப்பு ஏற்பட்டால், 72 மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்டவர் புகாரளிக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
'சைபர் கிரைம்' குற்றங்களில் முக்கியமானது பண மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களில், பொதுமக்கள் தங்களது மொபைல் போனிற்கு வரும் ஏதேனும் போலியான லிங்க், அப்ளிகேஷன்கள் வாயிலாக பணத்தை அதிகம் இழக்கின்றனர்.
பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பண இழப்பு ஏற்பட்டால், 72 மணி நேரத்திற்குள், ஹெல்ப் லைன் நெம்பர், '1930'க்கு தொடர்பு கொண்டு உடனடியாக புகாரளிக்க வேண்டும். 72 மணி நேரத்திற்கு மேல் கால தாமதமானால், www.cibercrime.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக புகாரளிக்க வேண்டும்.
மொபைல் போன் தொலைந்து போனால், உள்ளூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது ceir.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும். சைபர் கிரைம் சம்பந்தமான குற்றங்களுக்கு, மேற்கண்ட தகவல்களை பயன்படுத்தி பொதுமக்கள் புகார் செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.