/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்
/
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்
ADDED : ஆக 03, 2024 01:38 AM
மல்லசமுத்திரம்,
மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை வகித்து, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டத்தின் நோக்கம், விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். உதவி தலைமை ஆசிரியை செல்வலட்சுமி வரவேற்றார். மல்லசமுத்திரம் டவுன் பஞ்., தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான திருமலை கலந்து கொண்டு பேசினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலாமணி, உள்ளாட்சி பிரதிநிதி நிர்மலாசெல்வன் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர் பிரதிநிதி கோடீஸ்வரி நன்றி தெரிவித்தார்.
* வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு - விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் ஜாய்சி அன்னம்மாள் தலைமை வகித்தார். நாமக்கல் எஸ்.எஸ்.ஏ., - பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் கோமதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்திர மோகன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில், பள்ளியின் கட்டமைப்பு, இதர மேம்பாட்டுப்பணிகளுக்கு தேவையான தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.