/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சி
/
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சி
ADDED : ஆக 11, 2024 02:28 AM
எலச்சிபாளையம்;எலச்சிபாளையம் யூனியன், கொன்னையார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்-2009ன் அடிப்படையில், அரசுப்பள்ளிகளில் பள்ளி மேம்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் உமா, மறுகட்டமைப்பு முக்கியத்துவம் குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ், எலச்சிபாளையம் வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், தலைமை ஆசிரியர் நடேசன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.

