/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
24 டன் காய்கறி, பூ, பழங்கள் ரூ.9.8 லட்சத்துக்கு விற்பனை
/
24 டன் காய்கறி, பூ, பழங்கள் ரூ.9.8 லட்சத்துக்கு விற்பனை
24 டன் காய்கறி, பூ, பழங்கள் ரூ.9.8 லட்சத்துக்கு விற்பனை
24 டன் காய்கறி, பூ, பழங்கள் ரூ.9.8 லட்சத்துக்கு விற்பனை
ADDED : ஆக 05, 2024 02:09 AM
ராசிபுரம், ராசிபுரம் தாலுகாவில், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்துார், புதுச்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ராசிபுரம் உழவர் சந்தையில் விற்பனை செய்து செல்கின்றனர். ஆடி அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான, நேற்று அதிகாலை முதல் விற்பனை பரபரப்பாக இருந்தது.
நேற்று உழவர் சந்தைக்கு, 203 விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 19.7 டன் காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். பழங்கள், 4.7 டன், 230 கிலோ பூக்கள் என மொத்தம், 24.810 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு, 9.8 லட்சம் ரூபாயாகும். பொதுமக்கள், 4,920 பேர் வந்திருந்தனர். வழக்கத்தை விட ஆடி அமாவாசையான நேற்று, 150 கிலோ பழம், பூ ஆகியவை விற்றுள்ளன. தக்காளி கிலோ, 20, கத்தரி, 70, வெண்டை, 24, புடலை, 30, பீர்க்கன், 32, பாகல், 70, சுரைக்காய், 15, பூசணிக்காய், 35, அவரை, 70, பச்சை மிளகாய், 80, தேங்காய், 32, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 45, உருளை, 50, கேரட், 130 ரூபாய்க்கு விற்பனையானது.