ADDED : செப் 07, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துாரில் பூண்டு வரத்து குறைந்துள்ளதால், கிலோவுக்கு, 400 முதல், 420 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது,
இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த, 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு, 150- முதல், 250 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே தக்காளி, வெங்காயம் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தற்போது பூண்டு விலை உயர்வால் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.