/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு எள் விற்பனை
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு எள் விற்பனை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு எள் விற்பனை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.22 லட்சத்துக்கு எள் விற்பனை
ADDED : மார் 06, 2025 03:37 AM
நாமக்கல்: எலச்சிபாளையம் அடுத்த உஞ்சனையில், திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ் கூறியதாவது:
நேற்று நடந்த ஏலத்தில், எள் ஒரு கிலோ குறைந்தபட்சம், 131 ரூபாய், அதிகபட்சம், 186.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்-டது. 143 விவசாயிகள் கொண்டுவந்த, 14,061 கிலோ எள், 22 லட்சத்து, 3,348 ரூபாய்கு விற்பனையானது.
இதேபோல், நான்கு விவசாயிகள் கொண்டுவந்த, 473 கிலோ ஆமணக்கு, ஒரு கிலோ குறைந்தபட்சம், 65 ரூபாய், அதிக-பட்சம், 65.25 ரூபாய் என, மொத்தம், 30,796 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில், செவ்வாய் கிழமை தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கட-லைக்காய், நிலகடலை பருப்பு, எள், உளுந்து, கொள்ளு, துவரை, ஆமணக்கு உள்ளிட்ட விளைப்பொருட்கள் ஏலம் நடைபெறும்.
ஏலத்தில், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகு-தியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் விளைபொ-ருட்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயன்பெ-றலாம். விபரங்களுக்கு, 9442586421 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.