/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
60 படுக்கை வசதியுடன் சித்தா மருத்துவமனை
/
60 படுக்கை வசதியுடன் சித்தா மருத்துவமனை
ADDED : மே 01, 2024 01:38 PM
நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் சாலையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனை, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம், கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, பழைய அரசு தலைமை மருத்துவமனையில், சித்தா பிரிவு மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சென்டர் மட்டுமே செயல்படுகிறது.
இந்நிலையில், இங்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், 60 படுக்கையுடன் கூடிய சித்தா மருத்துவமனை பிரிவு அமைக்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
அப்போது, சித்தா மருத்துவமனையின் செயல்பாடு, நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், உதவி சித்த மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன், ஹோமியோபதி டாக்டர் கலைச்செல்வி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.