/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறப்பளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் கட்ட மண் பரிசோதனை பணி தொடக்கம்
/
அறப்பளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் கட்ட மண் பரிசோதனை பணி தொடக்கம்
அறப்பளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் கட்ட மண் பரிசோதனை பணி தொடக்கம்
அறப்பளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் கட்ட மண் பரிசோதனை பணி தொடக்கம்
ADDED : ஜூலை 12, 2024 12:58 AM
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. கடையேழு மன்னர்களில் ஒருவரான, ஓரியால் கட்டப்பட்டது. கோவில் முகப்பு பகுதியில், 3 கோடி ரூபாய் மதிப்பில், 3 நிலையிலான ராஜகோபுரம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கோவில் முன்புறம் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தில், சேலம் அரசு பொறியியல் கல்லுாரி பேராசிரியர்களை கொண்ட குழுவினர், மண் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணி கடந்த, 9 முதல் நடந்து வருகிறது.
இதுகுறித்து, செயல் அலுவலர் சுந்தரராசு கூறியதாவது:
கோவில் முன், 3 நிலை ராஜகோபுரம் உபயதாரர்கள் மூலம், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. ராஜகோபுரத்தின் அடித்தளம் அமைப்பது தொடர்பாக, மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மண் பரிசோதனை முடிவுக்கு பின், கட்டுமான பணிகள் தொடங்கப்படும். 1.67 கோடி மதிப்பில் அன்னதான கூடம், நந்தவனம் மற்றும் முடித்திருத்தும் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவில் நந்தவனத்தில், அந்தந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரக்கன்று நடப்பட உள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பக்தர்களின் வசதிக்காக கோவில் முன்புறம் வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக கோவில் முன் உள்ள பள்ளத்தில் பாறை, மண் கொட்டி சமதளப்படுத்தப்பட்டுள்ளது. பாறைகள் ஒவ்வொன்றும், 1 டன்னுக்கு அதிகமான எடை கொண்டவை. 150 மீட்டர் அகலம், 300 மீட்டர் நீளத்தில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது.இந்த பணிகள் முழுக்க உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஒரு வாரத்திற்குள் செய்யப்படும்.
இவ்வாறு கூறினார்.