/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிக்க பணம் கிடைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது
/
குடிக்க பணம் கிடைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது
குடிக்க பணம் கிடைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது
குடிக்க பணம் கிடைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது
ADDED : மார் 10, 2025 11:36 PM
மோகனுார்; மது குடிக்க பணம் கிடைக்காததால், தந்தையை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், நத்தமேட்டை சேர்ந்தவர் காராள கவுண்டர், 85; விவசாயி. மனைவி இறந்துவிட்டதால் மகன் முருகேசன், 53, மருமகள் சசிகலா மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசன், தர்மபுரி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார்.
ஊர் திரும்பியவர், மீண்டும் குடிக்கு அடிமையானார். நேற்று காலை 6:00 மணிக்கு, மது குடிக்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார்; தர மறுத்து விட்டனர்.
மனைவி சசிகலா மீது அவர் கல் வீசியுள்ளார். அவர் விலகியதால் தப்பினார். ஆத்திரம் அடங்காமல், மரக்கட்டையை எடுத்து துாங்கிக் கொண்டிருந்த தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார்.
உயிருக்கு போராடியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் இறந்தார். மோகனுார் போலீசார், முருகேசனை கைது செய்தனர்.