ADDED : ஜூன் 15, 2024 07:16 AM
நாமக்கல் : நாமக்கல் ஒன்றியத்துக்குட்பட்ட வள்ளிபுரம், வசந்தபுரம், வீசாணம், வேட்டாம்பாடி, விட்டமநாயக்கன்பட்டி ஆகிய கிராம பஞ்.,களில், 2022-23ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகள் குறித்து, 6வது சுற்று கடந்த, 10 முதல், நேற்று வரை, சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, சிறப்பு கிராமசபை கூட்டம் வீசாணம் கிராம பஞ்.,க்குட்பட்ட பஞ்., துவக்கப்பள்ளியில், நேற்று நடந்தது. பஞ்., தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஓவர்சீயர் கீதா பற்றாளராக கலந்து கொண்டார். பஞ்., செயலாளர் ராதாசாமி, தணிக்கை அறிக்கையை வாசித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், வள்ளிபுரம் பஞ்.,ல், மண்டல துணை பி.டி.ஓ., பிரேமலதா, வசந்தபுரம் பஞ்.,ல், மண்டல துணை பி.டி.ஓ., இளஞ்சியம்மாள், வேட்டாம்பாடி பஞ்.,ல், ஓவர்சீயர் திவ்யா, விட்டமநாயக்கன்பட்டி பஞ்.,ல், மண்டல துணை பி.டி.ஓ., செந்தில்குமார் ஆகியோர் பற்றாளர்களாக பங்கேற்றனர்.