/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'
/
'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'
'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'
'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'
ADDED : ஜூலை 26, 2024 03:11 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் பார் நடத்துபவர்கள், மற்றும் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்பவர்க-ளுக்கு, புதிய திருத்தியமைக்கப்பட்ட மது விலக்கு சட்டம் குறித்து விதிமுறைகள், விபரங்கள் தெரிவிக்கும் கூட்டம் நேற்று, ஆவாரங்காடு நகராட்சி மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பார் நடத்துபவர்கள், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் என, 100 க்கும் மேற்பட்ட-வர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சரவணன் பேசியதாவது:
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது, போலி, கலப்படம் மது பானம் தயாரிப்பு, விற்பனை செய்வது தெரிய வந்தால், புதிதாக திருத்தியமைக்கப்பட்ட மதுவிலக்கு சட்-டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிப்பாளையம் பகுதி முழுவதும், சட்ட விரோத மது பாட்-டில்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்து கண்காணிக்-கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்

