/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எம்.சாண்டு' மணல் தரம் குறித்து சோதனை
/
'எம்.சாண்டு' மணல் தரம் குறித்து சோதனை
ADDED : ஜூலை 28, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிக்காக, அலங்காநத்தம் அருகே, வடுகப்பட்டியில் உள்ள, 'எம்.சாண்டு' கிரஷர் தொழிற்சாலையில் இருந்து மணல் வாங்கி பயன்படுத்தப்படுகிறது.
இதன் தரம் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் தலைமையில், சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கதிரேசன் மற்றும் பொறியாளர்கள் சோதனை நடத்தினர். இதில், 'எம்.சாண்டு' மணலை பரிசோதனை செய்து, அதன் தரத்தை உறுதி செய்தனர். சாலையின் தரத்தில் குறைபாடு இல்லாமல், மணல் தயாரிக்க அறிவுரை வழங்கினர்.

