/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்காததால் தொடரும் விபத்து
/
வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்காததால் தொடரும் விபத்து
வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்காததால் தொடரும் விபத்து
வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்காததால் தொடரும் விபத்து
ADDED : ஏப் 23, 2024 04:26 AM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் வேகத்தடை க்கு வெள்ளை பெயின்ட் அடிக்காததால், தினந்தோறும் விபத்து நடந்த வண்ணம் உள்ளது.
ராசிபுரம் நகராட்சி ஒருவழிப்
பாதையில், புதுப்பாளையம் சாலை, பட்டணம் செல்லும் சாலை ஆகியவை சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது. இதில், 3க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், வேகத்தடையில் வெள்ளை பெயின்ட் அடிக்கவில்லை. இதனால், துாரத்தில் இருந்து வாகனங்களில் வேகமாக வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பதே தெரியவில்லை. டூவீலரில் வேகத்தை குறைக்காமல் வருபவர்கள், வேகத்தடை மீது விட்டு தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். முக்கியமாக, வயதான தம்பதியர் டூவீலரில் வரும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த, 2 நாட்களில் மட்டும், 5க்கும் மேற்பட்டோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வேகத்தடை தெரியும்படி வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும். அல்லது வேகத்தடை உள்ளது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

